*பேரிக்காய் லஸ்ஸி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இது உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகின்றது. இதனை சாப்பிடுவதால், பற்களும், இதயமும் வலுப் பெறுகின்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. பேரிக்காய் 2
  2. புளிப்பில்லாத தயிர் 1 டம்ளர்
  3. சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன்
  4. ஐஸ் வாட்டர் 1 டம்ளர்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பேரிக்காயை சுத்தம் செய்து, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கித் தட்டில் போட்டுக் கொள்ளவும்.

  3. 3

    பெரிய மிக்ஸி ஜாரில், நறுக்கின பேரிக்காய், சர்க்கரையை சேர்க்கவும்.

  4. 4

    பிறகு ஐஸ்வாட்டர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுத்து தயிரை சேர்த்து நன்கு அரைக்கவும்.

  6. 6

    அரைத்ததை பௌலுக்கு மாற்றவும்.

  7. 7

    பின் கிளாஸ் டம்ளர்களில் மாற்றவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*பேரிக்காய் லஸ்ஸி*தயார். செய்து பார்த்து அசத்தி, சம்மரை என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes