பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை

#4
#குக்பேட்ல் என் முதல் ரெசிபி
பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை ஒரு சத்தான, சுவைமிக்க, ஆரோக்கியமான ரெசிபி. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
பிரவுன் ரைஸை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மூன்று மணி நேரம் ஊறியதும் சற்று கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
- 3
கடாயில் இரண்டு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு,கடலைப் பருப்பு,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
- 4
அதில் அரைத்து வைத்துள்ள மாவையும், நறுக்கிய தேங்காயும் சேர்த்து வதக்கவும்.
- 5
வதக்கிய மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
- 6
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் காயவைக்கவும். மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
- 7
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் காய்ந்ததும் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து பத்து நிமிடம் வேக விடவும். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பிரவுன் ரைஸ் நீர் தோசை
#அரிசிஉணவுவகைகள்நீர் தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிலும் பிரவுன் ரைஸில் செய்யும் பொழுது மிகவும் ஆரோக்கியமானது. பிரவுன் ரைஸை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்துச் செய்யும் போது எளிதாக சீரணமாகும். Natchiyar Sivasailam -
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
மசாலா ரைஸ்
#மதியவுணவுவடித்த சாதம் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து பதினைந்து நிமிடங்களில் செய்து விடலாம். மிகவும் சுவையான ரைஸ். சிப்ஸ் மற்றும் ரைத்தாவோடு பரிமாறலாம். Natchiyar Sivasailam -
பிரவுன் சட்னி
#சட்னி & டிப்ஸ்எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சட்னி பிரவுன் சட்னி. இட்லியும் பிரவுன் சட்னியும் கொடுத்தால் ஒரு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இட்லி, தோசை , சப்பாத்தி, தயிர் சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் எல்லாவற்றுக்கும் பிரவுன் சட்னி சூப்பரா இருக்கும். பிரயாணங்களின் போது கொண்டு செல்ல மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
-
பொ(ரி)ருள் விளங்காய் உருண்டை
#அரிசிஉணவுவகைகள்பாட்டி செய்யும் சுவையான பலகாரங்களில் இதுவும் ஒன்று. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது. ஒரு உருண்டையும் ஒரு டம்ளர் தண்ணீரும் எடுத்துக் கொண்டால் பசி அடங்கும். Natchiyar Sivasailam -
வெண்டைக்காய் மசாலா
#மதியவுணவுவெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது. Natchiyar Sivasailam -
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
பிடி கொழுக்கட்டை
என் தோழிக்கு மிகவும் பிடித்த டிஃபன்.என் புகுந்த வீட்டு ஸ்பெஷல் ரெசிபி. மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அருமையான டிஃபன்.# ஸ்நாக்ஸ் Meena Ramesh -
த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
கோலி கொழுக்கட்டை(goli kolukattai recipe in tamil)
#npd1 #asma குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டைPriya ArunKannan
-
சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது. Natchiyar Sivasailam -
-
கிரீன் சட்னி
இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம் Farhu Raaz -
-
ஆரஞ்சு ரைஸ்
#5#குக்பேட்தமிழில் என் முதல் ரெசிபிஒரு முறை வீட்டுக்கு வந்த உறவினர் நிறைய ஆரஞ்சுப் பழங்கள் வாங்கி வந்தார்கள். ஜூஸ் மற்றும் பழமாகச் சாப்பிட்டு பின்னர் ஜூஸைப் பயன்படுத்தி ரைஸ் செய்தேன். அது சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது. அதிக அளவில் மசாலா சேர்க்கும் போது ரைஸில் ஆரஞ்சு ஃப்ளேவர் கிடைக்காது. குறைந்த அளவு மசாலா சேர்க்கும் போது ஆரஞ்சு ஃப்ளேவர் அப்படியே கிடைக்கிறது. Natchiyar Sivasailam -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
Nuchinunde
#karnataka இந்த ரெசிபி கர்நாடகாவின் பாரம்பரிய உணவாகும்.காலை உணவாகவும் அல்லது சிற்றுண்டியாகவும் இதனை சாப்பிடுவார்கள். மிகவும் ஆரோக்கியமான உணவு. Manju Jaiganesh -
-
பூண்டுக் குழம்பு
#மதிய உணவுபூண்டு, சுண்டை வத்தல், நல்லெண்ணெய் சேர்த்துக் குழம்பு செய்யும் போது வீடே மணக்கும். சூடான சாதத்துடன் பூண்டுக் குழம்பு, பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தமாயிருக்கும். Natchiyar Sivasailam -
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
கமெண்ட்