பொ(ரி)ருள் விளங்காய் உருண்டை

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#அரிசிஉணவுவகைகள

பாட்டி செய்யும் சுவையான பலகாரங்களில் இதுவும் ஒன்று. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது. ஒரு உருண்டையும் ஒரு டம்ளர் தண்ணீரும் எடுத்துக் கொண்டால் பசி அடங்கும்.

பொ(ரி)ருள் விளங்காய் உருண்டை

#அரிசிஉணவுவகைகள

பாட்டி செய்யும் சுவையான பலகாரங்களில் இதுவும் ஒன்று. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது. ஒரு உருண்டையும் ஒரு டம்ளர் தண்ணீரும் எடுத்துக் கொண்டால் பசி அடங்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. புழுங்கலரிசி. - 2 கப்
  2. பாசிப்பருப்பு. - அரை கப்
  3. பொரிகடலை. -3 மேசைக்கரண்டி
  4. வேர்க்கடலை. - 3 மேசைக்கரண்டி
  5. கறுப்பு எள் - 2 மேசைக்கரண்டி
  6. தேங்காய் துண்டுகள். - 3 மேசைக்கரண்டி
  7. ஏலக்காய் -. 4
  8. சுக்கு. - சிறு துண்டு
  9. நாட்டுச் சர்க்கரை - இரண்டரை கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கடாயில் புழுங்கலரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்.

  2. 2

    ஏலக்காய், சுக்கு இரண்டையும் ஒன்றிரண்டாக தட்டி ஆறவைத்த அரிசி பருப்புடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.

  3. 3

    வேர்க்கடலை, தேங்காய் துண்டுகள், கறுப்பு எள் முதலியவற்றை தனித்தனியாக வறுத்து வேர்க்கடலை தோல் நீக்கி வைக்கவும்.

  4. 4

    இரண்டரை கப் நாட்டுச் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துப் பாகு வைக்கவும்.

  5. 5

    வறுத்து வைத்துள்ள பொருட்களை மாவிருக்கும் பாத்திரத்தில் சேர்த்து நன்கு கிளறவும்.

  6. 6

    வெல்லப் பாகை ஊற்றிக் கிளறி சூட்டோடு உருண்டைகள் பிடிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes