வாழைப்பூ வடை

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
வாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை ....

வாழைப்பூ வடை

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
வாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை ....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் வாழைப்பூ
  2. 1/4 கப் துவரம் பருப்பு
  3. 1/4 கப் கடலைப் பருப்பு
  4. 3 மேசைக்கரண்டி பச்சரிசி
  5. 10-12 சின்ன வெங்காயம்
  6. 5 பற்கள் பூண்டு
  7. 1 துண்டு இஞ்சி
  8. 4 காய்ந்த மிளகாய்
  9. 1/4 கப் நறுக்கிய மல்லி இலை
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    வாழைப்பூவை நரம்பு நீக்கி, கருக்காமல் இருக்க மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்

  3. 3

    வாழைப்பூவை சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும். அ‌ல்லது மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளலாம்

  4. 4

    பின்பு பருப்பை நன்றாக தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். பருப்பு மிகவும் மைய அரைத்து விட கூடாது.

  5. 5

    அரைத்து வைத்த கலவையில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம் மற்றும் மல்லி இலை சேர்த்து நன்றாக பிசையவும்.

  6. 6

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைப்பூ கலவையை சிறிய சிறிய வடையாக தட்டி பொறித்து எடுக்கவும்.

  7. 7

    சுவையான சத்தான வாழைப்பூ வடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raihanathus Sahdhiyya
அன்று
Tamil Nadu
A post graduate student who has the hobby of cooking especially trying out new and healthy recipes
மேலும் படிக்க

Similar Recipes