மாங்காய் பச்சடி

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

இனிப்பும் புளிப்பும் கொண்ட சுவையான பச்சடி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. மாங்காய் 2
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. வெல்லம் ஒரு கப்
  5. 2மிளகாய்வற்றல்
  6. மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
  7. கடுகு ஒரு தேக்கரண்டி
  8. உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  9. எண்ணெய் தாளிக்க
  10. கறிவேப்பில்லை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாங்காயை தோலுடன் மூன்றாக நீளவாக்கில் நறுக்கி குக்கரில் எடுக்கவும். இதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்து எடுக்கவும்.

  2. 2

    தண்ணீர் குறைவாக இருக்க வேண்டும் நிறைய தண்ணீர் ஊற்றக்கூடாது. மாங்காய் வெந்தவுடன் மசித்து தோல் மற்றும் கொட்டை தனியாக எடுத்து விடவும்.

  3. 3

    மசித்த மாங்காயுடன் உப்பு மஞ்சள்தூள் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். சற்றே கெட்டியானவுடன் அணைத்து விடவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் தாளித்து மசித்த மாங்காயுடன் சேர்த்து இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes