சாமை பிடி கொழுக்கட்டை(samai pidi kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சாமை அரிசியை நன்கு அலசி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.வேண்டுமென்றால் கால் கப் பயத்தம் பருப்பும் சேர்த்துக் கொள்ளலாம். அதை அரை மணி நேரம் ஊற வைத்துதண்ணீர் கொதிக்கும் போதுசேர்த்து கிளறவும்.நான் சேர்க்கவில்லை.
- 2
இப்பொழுது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கடலை பருப்பு சேர்த்து சீரகமும் சேர்த்து வறுத்து இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து கடைசியாக தேங்காய் திருவலும் சேர்த்து வதக்கவும்.
- 3
இப்பொழுது நான்கு கப் தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்த உடன் ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்து 10 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து மூடி விடவும்.
- 4
அது நன்கு வெந்து இருக்கும்.இப்பொழுது இட்லி பானையில் வேகவைக்கும் தட்டில் பிடி கொழுக்கட்டை உருண்டைகளாக பிடித்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 5
அருமையான சுவையான உடம்பிற்கு ஏதுவான சாமை அரிசி பிடி கொழுக்கட்டை தயார்.இதற்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னி ஏதுவாக இருக்கும். நான் கொத்தமல்லி தொக்கு காரசாரமாக செய்து இருந்தேன்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்