சுவையான சமோசா சாட்

Hameed Nooh @cook_13961642
மிகவும் சுவையான இந்த சமோசா சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது.
சுவையான சமோசா சாட்
மிகவும் சுவையான இந்த சமோசா சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது.
சமையல் குறிப்புகள்
- 1
மைதாவுடன் வெதுவெதுப்பான எண்ணெய் கொஞ்சம் ஊற்றி நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கை அவித்து மசித்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் மசித்த உருளைககிழங்கு சேர்க்கவும்.
- 4
உருளைக்கிழங்கு கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
பின்பு மாவை தேய்த்து ஸ்டப்பிங்கை வைத்து சமோசா வடிவில் செய்து எண்ணெய்யில் பொறித்தெடுக்கவும்.
- 6
சமோசாவை ஒரு தட்டையில் வைத்து சாட் செய்ய தேவையான பொருட்களை மேலே பரப்பி சூடாக சாப்பிடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10415854



கமெண்ட்