விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)

சால்னா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோட்டுக் கடையில் இருந்து வரும் அந்த மனம்தான். ரோட்டுக்கடை சால்னாவை வீட்டில் செய்வது மிகக் கடினம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மை அல்ல. இந்த தேங்காய் பாய் மட்டன் சால்னா பிரியாணி மற்றும் தோசை வகைகளுக்கு மிகவும் ஏற்றது. இதை செய்வதற்கு குறைந்தது 30 நிமிடம் தான் ஆகும். #salna #biryani

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டன் துண்டுகளை நன்றாக அலசி மஞ்சள்தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
நன்றாக வெளிச்சமான இடத்தில் ஒரு அடுப்பை வைத்து அதில் விறகுகளை வைத்து பற்ற வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பின் மேல் ஒரு பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் 1 கரண்டி, மற்றும் 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.
- 5
அதில் அரைத்து வைத்த தக்காளி வெங்காய விழுது மற்றும் புதினா சேர்க்கவும்.
- 6
அதில் பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
- 7
தக்காளியில் இருந்து எண்ணெய் பாத்திரத்தின் ஓரங்களில் சேரும் வரை நன்றாக வதக்கி அதில் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- 8
இப்பொழுது மஞ்சள் தூள் (1/4 டீஸ்பூன்), மிளகாய் தூள் (2 டேபிள் ஸ்பூன்), கரம் மசாலா (1/2 டேபிள் ஸ்பூன்) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 9
இப்பொழுது அதில் 2 கப் மட்டன் வேக வைத்த தண்ணீர் ஊற்றி நன்றாக ஒரு தட்டு போட்டு மூடி கொதிக்க விடவும்.
- 10
நன்றாக கொதித்த பிறகு கொத்தமல்லி இலைகளை தூவிக் கொள்ளவும்
- 11
சுவையான விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)