உருளைக்கிழங்கு இறால் படகுகள்

உருளைக்கிழங்கை அவித்து இடையில் குழி போல் அமைத்து பொறித்த பின்பு இரால் சீஸ் கலவையை உள்ளே வைத்து பேக் செய்யும் ஒரு புதுமையான உணவு முறை..
உருளைக்கிழங்கு இறால் படகுகள்
உருளைக்கிழங்கை அவித்து இடையில் குழி போல் அமைத்து பொறித்த பின்பு இரால் சீஸ் கலவையை உள்ளே வைத்து பேக் செய்யும் ஒரு புதுமையான உணவு முறை..
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு அவித்து இரு பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
- 2
சூடு ஆறியதும் கிழங்கில் நடுவே கரண்டியால் எடுத்து படகு போல் பள்ளம் ஆக்கவும்.
- 3
இராலை சுத்தப்படுத்தி மிளகாய்த்தூள் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் துருவிய சீஸ் பனீருடன் இரால் மிளகுத்தூள் பாப்ரிகா மயோனைஸ் தக்காளி சாஸ் உப்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
பின்பு அதோடு கிழங்கிலிருந்து எடுத்ததை நன்கு மசித்து சேர்க்கவும்.
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு படகை பொறித்து எடுக்கவும்.
- 7
பிறகு சூடு ஆறியதும் கிழங்கினுள் சீஸ் இரால் கலவையை வைத்து துருவிய சீஸை தூவவும்
- 8
ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 200 டிகிரியில் சீஸ் உருகும் வரை பத்து நிமிடங்கள் பேக் செய்து மேலே சாஸ் ஊற்றி சாப்பிடவும்.
Similar Recipes
More Recipes









கமெண்ட்