க்ரீமியான உருளைக்கிழங்கு கோன்கள்

உருளைக்கிழங்கை மசித்து மொறு மொறுப்பான மாவு கோன்களில் நிரப்பப்படும் ஒரு இலகுவான சமையல் முறை. மாலையில் தேனீரோடு சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
க்ரீமியான உருளைக்கிழங்கு கோன்கள்
உருளைக்கிழங்கை மசித்து மொறு மொறுப்பான மாவு கோன்களில் நிரப்பப்படும் ஒரு இலகுவான சமையல் முறை. மாலையில் தேனீரோடு சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மாவில் எள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து சூடான நெய்யை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு மாவை நீண்ட கயிற்றை போல் வளர்த்து கூம்பு வடிவில் உள்ள அச்சில் சுற்றவும்.
- 3
உருளைக்கிழங்கு தோல் நீக்கி வேக வைத்து அதனுடன் க்ரீம் மற்றும் உப்பு சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் க்ரீமுடன் நறுக்கிய பூண்டு சேர்த்து குறைந்த தணலில் இரண்டு நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
பிறகு அதனோடு மிளகுத்தூளை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி மைதா கோன்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.
- 7
மசித்த உருளைக்கிழங்கை பைப்பிங் குடுவை அல்லது பையில் நிரப்பவும்.
- 8
இனி அதனை அச்சிலிருந்து நீக்கிய கூம்புகளில் நிரப்பினால் சுவையான மசித்த உருளைக்கிழங்கு கோன்கள் தயார்.
Similar Recipes
More Recipes










கமெண்ட்