சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நறுக்காமல் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 2
வேகவைத்த உருளைக் கிழங்குகளை ஒரு முள் கரண்டியால் அங்கங்கே குத்தி ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 3
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, முந்திரி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வதக்கிய மசாலாவை ஆற வைத்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்
- 5
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்க்கவும்
- 6
ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தயிரையும் அதில் சேர்க்கவும்
- 7
பொரித்தெடுத்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து கொதிக்க விடவும்
- 8
அடுப்பை சிறிய தீயில் வைத்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 9
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கஸ்தூரி மேத்தியை பொடித்து தூவவும்.
Similar Recipes
More Recipes







கமெண்ட்