கேழ்வரகு மாவு இடியாப்பம் (Kelvaragu Maavu Idiyappam Recipe in Tamil)

Jayasakthi's Kitchen @cook_16049128
#ஆரோக்கியசமையல்
கேழ்வரகு மாவு இடியாப்பம் (Kelvaragu Maavu Idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியசமையல்
சமையல் குறிப்புகள்
- 1
கேழ்வரகு மாவு இரும்பு சத்து நிறைந்தது. இது சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவில் தினமும் ஒரு முறை இதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
இடியாப்பம் செய்வதற்கு கேழ்வரகு மாவை சூடான வாணலியில் இரண்டு நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்
- 3
தண்ணீரை உப்புத் தூள் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும்
- 4
இந்த கொதித்த தண்ணீரை வறுத்த மாவில் சிறிது சிறிதாக சேர்த்து பிழியும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 5
ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்
- 6
இந்த மாவை இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லி தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும்.
- 7
பத்து நிமிடங்கள் வெந்த பிறகு இதை உதிர்த்து தேங்காய்த் துருவல் சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்
- 8
குருமா சேர்த்தும் சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11262771



கமெண்ட்