ராகி இட்லி (Ragi Idli Recipe in Tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். ரத்தம் சுத்தியாகும். எலும்பு உறுதிப்படும். சதை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். #Chefdeena

ராகி இட்லி (Ragi Idli Recipe in Tamil)

ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். ரத்தம் சுத்தியாகும். எலும்பு உறுதிப்படும். சதை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். #Chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2 கப்ராகி
  2. 1 கப்ப்ரொவ்ன் அரிசி
  3. 1 கப்ப்ரொவ்ன் அவல்
  4. 1 கப்உளுந்து
  5. 1ஸ்பூன்வெந்தயம்
  6. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசி, ராகி ஆகியவற்றை நன்றாக கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். அதே போல் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றையும் ஊறவக்கவும். அவலை தனியே ஊற வைக்கவும்.

  2. 2

    இவை அனைத்தையும் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கிரைண்டரில் முதலில் உளுந்து, வெந்தயத்தை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ராகி, அரிசி, அவல் ஆகியவற்றை நன்றாக அரைத்து உளுந்து மாவுடன் நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் தேவையான உப்பு சேர்த்து இட்லி சுடலாம்.

  3. 3

    குறிப்பு: உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்). உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும். சிகப்பு அரிசிக்கு பதிலாக நார்மல் அரிசியும் பயன்படுத்தலாம். சிகப்பு அரிசியில் நார்சத்து உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manjula Sivakumar
அன்று

கமெண்ட் (2)

Siva
Siva @rcsivakumar14
this Ragi idli really came well very soft idli also thosai. thank you. keep it up 👍

Similar Recipes