பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)

# பொங்கல்
பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)
# பொங்கல்
சமையல் குறிப்புகள்
- 1
பொட்டுக்கடலை முறுக்கு செய்ய:
- 2
அரிசி ஐ 1_1/2 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 3
மிளகாயை தனியாக ஊறவிடவும்
- 4
பின் இரண்டு முறை அலசி வடிகட்டி கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்
- 5
மிக்ஸியில் கறிவேப்பிலை சீரகம் ஊறவைத்த வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்
- 6
பின் அரைத்த விழுதை கிரைண்டரில் அரிசி உடன் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 7
உளுந்தை வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்
- 8
பொட்டுக்கடலை ஐ மிக்ஸியில் போட்டு நைசாக பவுடர் செய்து கொள்ளவும்
- 9
பின் உளுந்து மற்றும் பொட்டுக்கடலை மாவு ஐ தனித்தனியாக ஜலித்து கொள்ளவும்
- 10
எள் மற்றும் ஓமம் ஆகியவற்றை கல் மண் போக சுத்தம் செய்து அலசி வைக்கவும்
- 11
பின் அரைத்து எடுத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 12
பின் அரித்து அலசி வைத்துள்ள எள் மற்றும் ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 13
பின் உளுந்து மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 14
பின் பொட்டுக்கடலை மாவு ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 15
பின் நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 16
கைகளில் ஒட்டாமல் வரும் வரை பிசைந்து கொள்ளவும்
- 17
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 18
முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவை நிரப்பவும்
- 19
பின் சூடான எண்ணெயில் பிழிந்து விட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்
- 20
சுவையான பொட்டுக்கடலை முறுக்கு ரெடி
- 21
தேங்காய் பர்பி:
- 22
தேங்காய் ஐ இளந்தேங்காய் ஆக இல்லாமல் முற்றிய வரகாயாகவும் இல்லாமல் ஓரளவிற்கு இருக்கும் தேங்காய் ஆக தேர்ந்தெடுக்கவும்
- 23
தேங்காயின் அடி வரை துருவாமல் வெள்ளை பகுதியை மட்டும் துருவி எடுக்கவும்
- 24
பின் வெறும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் இரண்டு மூன்று முறை சுற்றி எடுக்கவும்
- 25
பின் நன்கு அளந்து கொள்ளவும்
- 26
பின் அதே அளவு சர்க்கரை ஐ அளந்து கொள்ளவும்
- 27
பின் ஏலக்காய் உடன் சர்க்கரை சேர்த்து பொடி செய்து கொள்ளவும்
- 28
அடி கணமான வாணலியில் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து முதலில் நன்கு கரைக்கவும்
- 29
சர்க்கரை கரைந்ததும் அடுப்பை பற்ற வைத்து மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும்
- 30
சர்க்கரை ஒரு கம்பி பதம் வந்ததும் அளந்து வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் பொட்டுக்கடலை ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 31
தேங்காய் சர்க்கரை பாகுடன் சேர்ந்து நன்கு வெந்து கொதித்து திக்காக சுண்டி வரும் போது நெய் விட்டு தொடர்ந்து கிளறவும்
- 32
அடியில் வெளுத்து ஓரங்களில் நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 33
பின் ஆறியதும் துண்டுகள் போடவும்
- 34
சுவையான மணமான தேங்காய் பர்பி ரெடி
- 35
சர்க்கரை முழுவதும் கரைந்த பின் அடுப்பை பற்ற வைக்க வேண்டும்
- 36
பாகு பதம் மிகவும் முக்கியமானது அதே போல் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக நுரைத்து வரும் போது இறக்க வேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
- கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
- வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
- சிம்பிள் சிக்கன் கிரேவி (simple chicken gravy recipe in Tamil)
- வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
- கரும்பு சாறு சாமை பொங்கல் பொங்கல் ஸ்பெஷல் நாட்டுகாய்கரி கூட்டு








































கமெண்ட்