முளைகட்டிய கொண்டைகடலை சனா பிரியாணி (Mulaikattiya channa biryani recipe in tamil)

முளைகட்டிய கொண்டைகடலை சனா பிரியாணி (Mulaikattiya channa biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொண்டைகடலை சனா இரண்டையும் 4 விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும், அரிசியை 3/4 மணி நேரம் ஊறவைக்கவும், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், மல்லிதழை, புதினாஇலை, நறுக்கி கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் நெய், சிறிது எண்ணெய் விட்டு அதில் பிரியாணிஇலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், சேர்த்து பொரிந்ததும் அதில் சிறிது மல்லிதழை, புதினாஇலை சேர்க்கவும், பிறகு அதில் வெங்காயம் சேர்க்கவும், வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு சேர்த்து மிளகாய்தூள் பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்,
- 2
நன்கு வதங்கியதும் அதில் தயிர் கொண்டைகடலை சேர்த்து 5நிமிடம் வதக்கி (ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர்) ஊற்றவும், தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை சேர்க்கவும், 3/4 பதம் வெந்ததும் தீயை குறைத்து தம்மில் போடவும், சாதம் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும், சுவையான கொண்டைகடலை சனா பிரியாணி தயார்,,..
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்