கோபி 65 (காலிபிளவர் சில்லி) (Gobi 65 recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
கோபி 65 (காலிபிளவர் சில்லி) (Gobi 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காளிபிளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.. அதில் நறுக்கிய காலிபிளவர் சேர்த்து 2-3 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் தண்ணீர் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
பின்னர் எடுத்து வைத்துள்ள மாவு வகைகள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.. 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.. பின்னர் ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சில்லி துண்டுகளை சேர்த்து நன்றாக பொரித்து எடுக்கவும்.சூடான சுவையான கோபி 65 ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13539897









கமெண்ட்