கோவை உருளை பூண்டு வருவல்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு முழு பூண்டை இடிச்சு எடுத்துக் கொள்ளவும்.
- 2
சூடான தண்ணீரில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
- 3
அடி கனமான கடாய் சூடு ஆன பின்பு எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் இடித்த பூண்டை போட்டு பிரவுனிஷ் ஆகும் வரை வதக்கவும்.(சிம்மில் வைக்க வேண்டும்) பின்பு ஒரு கொத்து கறிவேப்பிலையை போடவும்.
- 4
கறிவேப்பிலை பொரிந்தவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.ஐந்து நிமிடம் கிளறிய பின்பு தேவைக்கேற்ப உப்பு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 5
ஐந்து நிமிடம் ஆன பின்பு இரண்டு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். நன்கு சுருண்டு வரும் நேரத்தில் கால் ஸ்பூன் பெப்பர் தூள் தூவி நன்கு கிளறவும்.
- 6
20 நிமிடம் எடுத்துக் கொள்ளும் பின்பு ஒரு கொத்து கறிவேப்பிலையை மேலே தூவி 3 நிமிடம் கிளறி விடவும். பின்பு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்