முள்ளங்கி கீரை கூட்டு

முள்ளங்கி கீரை கூட்டு
சமையல் குறிப்புகள்
- 1
முள்ளங்கி கீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
- 2
பயத்தம் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும். பருப்பு வேகும் போது சிறிது எண்ணெய் சேர்த்தால் பொங்காமல் மலர்ந்து இருக்கும்.
- 3
துருவிய தேங்காயில் சீரகம் சேர்த்து நீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
- 4
பயத்தம் பருப்பு நல்ல நெத்து பதத்திற்கு வரும் போது மஞ்சள் தூள் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
- 5
நன்கு கொதித்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்க்கவும்.
- 6
அடுப்பை சிம்மரில் வைத்து கீரையை மூட நன்றாக வேகும்.
- 7
வைத்துள்ள அரிசி மாவு சிறிது நீர் சேர்த்து நன்கு கரைத்து சேர்த்து கொள்ளவும்.
- 8
சிறிது நேரம் கழித்து இறக்கி அதில் அரைத்த (துருவல் சீரகம்) விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 9
உளுத்தம்பருப்பு, கடுகு சேர்த்து தாளித்து போட சுவையான முள்ளங்கி கீரை கூட்டு இப்போது ருசிக்க தயாராக உள்ளது.
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்