கோதுமை மாவு மேக்ரோனி இன் ஒயிட் சாஸ் (kothumai maavu macaroni in white sauce recipe in tamil)

பொதுவாக கடையில் வாங்கும் பாஸ்தா மைதா வினால் தான் செய்யப்பட்டு இருக்கும். அது குழந்தைகள் சாப்பிட்டால் செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும். அதனால் மேக்ரோனி வீட்டிலேயே கோதுமை மாவு கொண்டு எளிமையாக செய்யும் முறையை இந்த ரெசிபியில் நீங்கள் காணலாம். இதில் நான் கோதுமை மாவைப் பயன்படுத்தி தான் ஒயிட் சாஸ்சும் செய்துள்ளேன். #ranjanishome

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சப்பாத்தி மாவில் உப்பு, எண்ணெய், மற்றும் பால் சேர்த்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த சப்பாத்தி மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் சின்னச் சின்ன கட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
- 3
வெட்டிய கட்டத்தில் மொத்தம் நான்கு முனைகள் இருக்கும். அதில் முதலில் இரு எதிர் முனைகளை ஒன்றாக சேர்க்கவும். பின்னர் மிச்சம் இருக்கும் இரண்டு எதிர் முனைகளை பின்புறமாக சேர்க்கவும்.
- 4
இந்த வடிவம் தான் கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை உங்களுக்குப் பிடித்த வடிவத்தை நீங்கள் செய்து கொள்ளலாம்.
- 5
இதன்படி வைத்துள்ள அனைத்து மாவீரர்களையும் தேவையான வடிவத்தில் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 6
ஒரு வாணலியில் 2 கப் தண்ணீர் சேர்த்து அதில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 7
செய்து வைத்திருக்கும் மேக்ரோனி கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.
- 8
15 நிமிடம் வேக வைக்கவும் மேக்ரோனி தண்ணீரின் மேற்புறத்தில் மிதந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம்.
- 9
வேகவைத்து எடுத்த மக்ரோனியை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- 10
தனியாக ஒரு கப்பில் 3 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் 1 டம்ளர் பாலை நன்றாக கலந்து கொள்ளவும். கட்டிகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
- 11
ஒரு வாணலில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் பொடிதாக நறுக்கிய நான்கு பல் பூண்டு மற்றும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 12
இப்பொழுது இதில் கலந்து வைத்திருக்கும் கோதுமை மாவு மற்றும் பால் கலவையை ஊற்றவும். கட்டிகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளவும்.
- 13
தேவைக்கேற்ப மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம் நான் 1 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துள்ளேன்
- 14
இப்பொழுது வேகவைத்து எடுத்த மக்ரோனியை இது சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 15
இறுதியாக 1/4 டேபிள் ஸ்பூன் ஒரிகநோ மிக்ஸ் சேர்த்து இறக்கவும்.
- 16
கோதுமை மாவு கொண்டு வீட்டிலேயே செய்த எளிமையான ஒயிட் சாஸ் மக்ரோனி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்