தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)

தினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்..
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
தினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்..
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணலியை வைத்து தினையை பொன் முறுவலாக வறுத்து கொள்ளவும்.
- 2
சற்று ஆறியதும் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பாரம்பரிய முறைப்படி புடைத்து உமி, தூசுகளை அகற்றவும்.
- 3
அகற்றிய தினையை களைந்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- 4
அடுப்பில் குக்கரை வைத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பால் ஊற்றி அதில் 2 கரண்டி நெய் சேர்த்து நன்கு வேக விடவும்.
- 5
அதே சமயம் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை கரையும் வரை காய்ச்சி வடிகட்டி பின் லைட்டான பாகு பதம் வரும் வரை அடிபிடிக்காமல் காய்ச்சி அதில் 1/2 மூடி தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
குக்கரை ஆவி வெளியானதும் திறந்து அதில் ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம் நுனிக்கி, வெல்லபாகை சேர்த்து கிளறவும்.
- 7
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 8
வறுத்த முந்திரி திராட்சையுடன் வெள்ளரி விதை சேர்த்து பாயாசத்தில் சேர்க்க பாரம்பரிய தினை பாயாசம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்