கிராண்ட் சீரகச்சம்பா மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

கிராண்ட் சீரகச்சம்பா மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய கடாயில் எண்ணெய், நெய் சேர்த்து கரம் மசாலா சேர்த்து தாளித்து எடுக்கவும்.
- 2
மட்டன் கழுவி மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து 3 சாதம் வரும் வரை குக்கர் வேக வைத்து எடுக்கவும்.
- 3
வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
- 4
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
பின்பு தக்காளி, புதினா மல்லி சேர்த்து நன்கு வதக்கி சுண்டி வரவும்.
- 6
அதனுடன் வேக வைத்த மட்டன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு கொதிக்க விடவும்.
- 7
பின்பு பிரியாணி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வேக விடவும்.
- 8
தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- 9
பின்பு தேவையான அளவு தண்ணீர் அல்லது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்
- 10
அதில் அரிசி தண்ணீர் வடித்து சேர்க்கவும். நன்கு வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 20 நிமிடம் வேக வைக்கவும்
- 11
நன்கு தண்ணீர் குறைய ஆரம்பித்ததும் புதினா மல்லி சேர்த்து தம் சேர்க்கவும்.
- 12
தம் பிரித்தும் நெய் சேர்த்து பரிமாறவும். சுவையான மட்டன் பிரியாணி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
- பேபிகார்ன் கிரேவி (Baby corn gravy recipe in tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம் (Sarkaraivalli kilanku paniyaram recipe in tamil)
- பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)































கமெண்ட்