கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)

வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki

சமையல் குறிப்புகள்
- 1
வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் கெட்டியான பாகு பதம் வந்ததும் அரைத்து வைத்த வேர்க்கடலை போட்டு கிளறவும் ஏலக்காய் தூள் சேர்க்கவும் சிறிது நெய் சேர்க்கவும் நன்றாக கெட்டியாக வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.
- 3
ஒரு கத்தியால் துண்டுகள் போடவும் சிறிது ஆறிய பின் தனித்தனியாக எடுத்து வைக்கவும் சுவையான கடலை மிட்டாய் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்