கொண்டைகடலை, சிவப்பு பீன்ஸ் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
6மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். இஞ்சி பூண்டு விழுது செய்து கொள்ளுங்கள்.
- 2
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி பொடியாகநறுக்கி வைக்க வேண்டும்.
- 3
குக்கரில் 3ஸ்புன் நெய், 3ஸ்புன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும். பிறகு பொடியாகநறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போடவும்,. உப்பு போடவும். நன்றாக வதக்கவும். வேக வைத்த கொண்டைகடலை, சிவப்பு பீன்ஸ் போட்டு வதக்கவும்.
- 4
1 டம்ளர் பாஸ்மதி அரிசி க்கு 2டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சூடான சுவையான கொண்டைகடலை, சிவப்பு பீன்ஸ் பிரியாணி ரெடி. தயிர் பச்சடி யுடன் சாப்பிடலாம். அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்