டீக்கடை மசால் வடை

ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பை 3 மணிநேரம் ஊறவைக்கவும். 3மணி நேரம் கழித்து பின் அதனை தண்ணீர் வடிகட்டி, ஒரு தட்டில் கொட்டி நிழலில் 10நிமிடம் உலர்த்தி கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- 2
கடலைப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 3
அதே ஜாரில் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து, தண்ணீர் இல்லாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 4
ஏற்கனவே அரைத்த கடலைப்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு, அரைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 5
பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும், உருண்டைகளை வடைகளாக தட்டி, அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 6
மிதமான சூட்டில் எல்லா வடைகளையும் போட்டு எடுக்கவும். சுவையான மசால் வடை ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்