சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை வேக வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, சீரகம்,சோம்பு, பட்டை,ஏலக்காய், கிராம்பு, நட்சத்திர சோம்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்
- 2
பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை சிம்மில் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கிளறி முட்டையை அதில் வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் அதில் நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும், பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். அதில் வைத்துள்ள தயிரை சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அரிசி, உப்பு சேர்த்து கிளறி வறுத்த முட்டைகளை சேர்த்து குக்கரை மூடி 2விசில் வந்ததும் இறக்கவும்
- 6
பிரியாணி உடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட்