ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Combo5
#ஜீரா ரைஸ்+தால்

ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)

#Combo5
#ஜீரா ரைஸ்+தால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
5 பரிமாறுவது
  1. ஜீரா ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
  2. 3/4 கப்புளுங்கல் அரிசி-
  3. 1&1/2 கப்தண்ணீர்-
  4. 2டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்-
  5. 1துண்டுபட்டை-
  6. 1பிரியாணி இலை-
  7. 2கிராம்பு-
  8. 3ஏலக்காய்-
  9. 2டீஸ்பூன்சீரகம்-
  10. 1பல்லாரி வெங்காயம்-
  11. 1பச்சை மிளகாய்-
  12. தேவையான அளவுகல் உப்பு-
  13. 1/2மூடிஎலுமிச்சை பழம்-
  14. ஜீரா ரைஸ் மேல் அழகுபடுத்த தேவையான பொருட்கள்:
  15. 1டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்-
  16. 1பல்லாரி வெங்காயம் சிறியது-
  17. தேவையான அளவுகொத்துமல்லி தழை-
  18. தால் செய்ய தேவையான பொருட்கள்:
  19. 1டீஸ்பூன்நல்லெண்ணெய்-
  20. 50கிராம்துவரம் பருப்பு-
  21. 3டீஸ்பூன்பாசி பருப்பு-
  22. 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள்-
  23. 1/2டீஸ்பூன்கொத்துமல்லி தூள்-
  24. 1/4டீஸ்பூன்சீரகம் தூள்-
  25. 1/2டீஸ்பூன்மிளகாய் தூள்-
  26. தேவையான அளவுஉப்பு தூள்-
  27. தேவையான அளவுதண்ணீர்-
  28. தால் தாழிப்பிற்கு தேவையான பொருட்கள்:
  29. 2டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்-
  30. 1டீஸ்பூன்சீரகம்-
  31. 4பல்பூண்டு-
  32. 1இன்ச்இஞ்சி-
  33. 1பல்லாரி வெங்காயம்-
  34. 2காஸ்மீர் காய்ந்த சிவப்பு மிளகாய்-
  35. மிளகாய் தூள் தாழிப்புக்கு தேவையான பொருட்கள்:
  36. 1டீஸ்பூன்நல்லெண்ணெய்-
  37. 1/2டீஸ்பூன்மிளகாய் தூள்-
  38. இறுதியாக கொத்துமல்லித் தழைகள் தூவிக் கொள்ளவும்

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    3/4கப் புளுங்கல் அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
    ஜீரா ரைஸ்-க்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
    எண்ணெய் சூடான பிறகு 1துண்டு பட்டை,1பிரியாணி இலை,2கிராம்பு,3ஏலக்காய்,2டீஸ்பூன் சீரகம் போட்டு தாளிக்கவும்.
    அடுத்து பொடியாக நறுக்கிய 1பல்லாரி வெங்காயத்தை பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
    அடுத்து 1பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    3/4கப் புளுங்கல் அரிசியை தாளிப்பு பாத்திரத்தில் போட்டு 2நிமிடம் நன்றாக வதக்கவும்.

  4. 4

    ரைஸ் குக்கரில் 1&1/2கப் தண்ணீர் ஊற்றவும்.பின் தேவையான அளவு கல் உப்பு போடவும்.
    அடுத்து தாழிப்பு பொருட்கள் மற்றும் வதக்கிய அரிசி அனைத்தையும் ரைஸ் குக்கரில் போட்டு கிளரவும்.

  5. 5

    ஜீரா ரைஸ் வேகும் வரை மூடி வைக்கவும்.
    ஜீரா ரைஸ் முக்கால் பதம் வெந்த பிறகு 1/2மூடி எலுமிச்சை பழம் சாற்றை பிளிந்துக் ஜீரா ரைஸ் சாதம் மேல் ஊற்றவும்.

  6. 6

    ஜீரா ரைஸ் மேல் அழகுப்படுத்துவதற்கு தேவையான 1சிறிய பல்லாரி வெங்காயத்தை நீளமாக கட் செய்துக் கொள்ளவும்.
    ஒரு தாவாவில் 1டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு கட் செய்து வைத்த வெங்காயத்தை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

  7. 7

    வறுத்த வெங்காயம்,கொத்துமல்லிதழைஇலைகளை ஜீரா ரைஸ் மேலே தூவவும்.

    "ஜீரா ரைஸ்" தயார்........

  8. 8

    தால் செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
    50கிராம் துவரம் பருப்பு,3டீஸ்பூன் பாசிப் பருப்புகளை நன்றாக கழுவி சுத்தம்செய்து 1/2மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    பிரஷ்ஷர் குக்கரில் 1டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
    எண்ணெய் சூடான பிறகு

    ஊறவைத்த பருப்புகளை போடவும்.

  9. 9

    1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2டீஸ்பூன் கொத்துமல்லி தூள்,1/2டீஸ்பூன் மிளகாய் தூள்,1/4டீஸ்பூன் சீரகம் தூள்,தேவையான அளவு உப்பு தூள்,பருப்புகள் மூழ்கிற அளவுக்கு தண்ணீர் சேர்த்து கிளரவும்.

  10. 10

    பிரஷ்ஷர் குக்கரை மூடி வைத்து 5 அல்லது 6 விசில் விடவும்.

    தால் தாழிப்புக்கு தேவையான பொருட்களை தயார் செய்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
    எண்ணெய் சூடான பிறகு 1டீஸ்பூன் சீரகம் போட்டு பொறியவிடவும்,4பல் நறுக்கிய பூண்டு,1இன்ச் நறுக்கிய இஞ்சி போட்டு தாளிக்கவும்.

  11. 11

    பொடியாக நறுக்கிய 1பல்லாரி வெங்காயம்,காய்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய்-2 போட்டு வதக்கவும்.

    வேகவைத்த பருப்புக் கலவையை தாளிப்பு சட்டியில் போட்டு 5 அல்லது 10நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.

    தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

  12. 12

    பாத்திரத்தில் 1டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு 1/2டீஸ்பூன் மிளகாய் தூள் போட்டு தாளித்து பின் பருப்பு கலவையில் ஊற்றவும்.

    "தால்" தயார்....

  13. 13

    "ஜீரா ரைஸ் & தால்" தயார்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes