தினை அரிசி சர்க்கரைப் பொங்கல்

Nalini Shanmugam @Nalini
#vattaram Week15
#friendshipday
@Cook_renubala123
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு மற்றும் திணை அரிசியை நீர் விட்டு நன்கு அலசி 15 நிமிடம் நீரில் ஊற விடவும். பிறகு நீரை வடித்துவிட்டு 3 கப் நீர் விட்டு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கப் நீரில் வெல்லத் துருவலை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும். இந்த நீரை வேகவைத்த திணை அரிசியில் சேர்த்து கலந்து குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வேகவிடவும். இடையிடையே நெய் விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 3
ஏலக்காயை பொடி செய்து சேர்த்து நன்கு கிளறி ஸ்டவில் இருந்து இறக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சர்க்கரை பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15319575








கமெண்ட் (2)