தயிர் சாதம் / curd rice recipe in tamil

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

தயிர் சாதம் / curd rice recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் அரிசி
  2. 1.5பாக்கெட் தயிர் (தேவைகேற்ப)
  3. 1மிளகாய்
  4. 1வரமிளகாய்
  5. 1துண்டு இஞ்சி
  6. தாளிக்க:
  7. கடுகு
  8. உளுத்தம் பருப்பு
  9. கடலைபருப்பு
  10. கறிவேப்பிலை
  11. சிறிதளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சாதத்திற்கு அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

  2. 2

    தண்ணீர் கொதித்ததும், அரிசியை நன்கு கழுவி சேர்க்கவும்.கொதித்ததும் உப்பு சேர்க்கவும்.

  3. 3

    20-25 நிமிடத்தில் அரிசி நன்றாக வெந்து விடும். தயிர் சாதம் என்பதால் இன்னும் நன்றாக குழைவாக வேக வைக்கவும்.

  4. 4

    வேக வைத்த அரிசியை வடித்து விடவும்.மீண்டும் சிறு தீயில் வைத்து பொடிய விடவும்.அதாவது, வடிகட்டிய சாதத்தில்,எஞ்சி இருக்கும் தண்ணீரை வற்ற செய்வது.

    கொஞ்சம் ஆறிய பிறகு தயிர் சாதம் செய்யலாம்.

  5. 5

    ஒரு தட்டில் தேவையான அளவு சாதம் எடுத்து, அதில் தேவையான அளவு தயிர் கலந்து, சாதத்தை நன்கு மசித்து நன்றாக கிளறவும்.

  6. 6

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து,இஞ்சி துண்டு, மிளகாய்,வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

  7. 7

    பின்னர் கலந்து வைத்த சாதத்தை வாணலியில் சேர்த்து கிளறவும். நன்றாக சூடானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

  8. 8

    சுவையான, சூடான, சத்தான, தயிர் சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Top Search in

Similar Recipes