சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு திக்காகும் வரை காய்ச்சவும். அவ்வப்போது கிளறி விடவும்.
- 2
பால் பாத்திரத்தின் ஒரத்தில் படியும் ஆடைகளை சுரண்டி பாலில் சேர்க்கவும்.
- 3
பால் நன்றாக சுண்டி பாதியாக குறைந்து திக்காக மாறிய உடன் கான்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கலக்கவும். பின் இனிப்பு சுவையை சரி பார்த்து தேவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து கலக்கவும். பால் சற்று கலர் மாறி திக்காக மாலாய் சேர்த்து வந்ததும். அடுப்பை அணைக்கவும்.
- 4
ஆரஞ்சு பழத்தின் சுழையை எடுத்து பொடியாக நறுக்கி வைக்கவும். அதனை மாலாய் பாலுடன் கலக்கவும். ஆரஞ்சு சாறு இருந்தால் அதையும் சேர்க்கவும்.
- 5
ஆரஞ்சு தோலை பிரிசரில் வைத்து எடுத்து அதில் ஆரஞ்சு மாலாய் எடுத்து பிரிஜ்ஜில் வைத்து ஜில் என்று பரிமாறவும். சுவையான ஆரஞ்சு மாலாய் தயார். இதில் விரும்பினால் நட்ஸ் சேர்க்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15319672



















கமெண்ட் (2)