தந்தூரி ரொட்டி

மாலதி
மாலதி @cook_30848775
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்கோதுமை மாவு
  2. 1 கப்மைதா மாவு (இதை தேவைக்கேற்ப இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளவும்)
  3. ஒரு கரண்டிதயிர்
  4. ஒரு ஸ்பூன்உப்பு
  5. ஒரு ஸ்பூன்சர்க்கரை
  6. ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  7. அரை ஸ்பூன்பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேலே சொன்ன அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். நன்றாக கலந்து தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் அதை ஒரு ஈரத் துணியில் மூடி வைக்கவும்

  2. 2

    பின்னர் மாவை சிறிதளவு எடுத்து அதை தடிமனாக தேய்த்துக் கொள்ளவும்.
    தேய்த்து பின் ஒரு தவாவை எடுத்து அதில் தேய்த்த ரொட்டியை ஒரு பக்கம் வேக வைக்கவும்.

  3. 3

    பாதியளவு வெந்த உடன் அந்த ரொட்டியை எடுத்து நேரடியாக வெப்பத்தில் அல்லது அடுப்பில் வைக்கவும்.
    ரொட்டியை இருபுறமும் வெப்பத்தில் காட்டவும்

  4. 4

    மற்றொரு முறை:

    பாதி வெந்த ரொட்டியை தவா உடன் சேர்த்து அடுப்பின் வெப்பத்தில் அல்லது சுடரில் நேரடியாக காட்டவும். ரொட்டி நன்றாக வேகும் வரை காண்பிக்கவும்.

    ரொட்டி வெந்தவுடன் எடுத்து தேவைக்கேற்ப வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    சுவையான பட்டர் ரொட்டி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
மாலதி
மாலதி @cook_30848775
அன்று

Similar Recipes