சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட் ஸ்லைஸ்களை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்
- 2
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றைபொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கையில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்
- 3
பிரட் துண்டுகளை நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
வறுத்த பிரெட் துண்டுகளை தனியாக எடுத்துக்கொள்ளவும் பிறகு அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை வதக்கவும்.
- 5
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள் தேவையான அளவு உப்பு இவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- 6
பிறகு வறுத்த ப்ரெட் துண்டுகள் மற்றும் சோயா சாஸ் தக்காளி சாஸ் இவற்றைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 7
நன்கு கிளறிய பின் சுவையான பிரட் சில்லி தயாராகிவிட்டது. சர்வின் பவுலுக்கு மாற்றிப் பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15345019















கமெண்ட்