மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)

#pongal2022
இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா "
மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022
இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா "
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து அதில் 1 ஸ்பூன் சீரகம், மிளகு, 1 inch இஞ்சி, 5 பூண்டு, 1 பட்டை, 2 ஏலக்காய், 3 கிராம்பு, மஞ்சள்த்தூள், 1 தக்காளி சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து வேக வைக்கவும்
- 3
பின் மசாலா தயார்ச் செய்யவும் கடாயில் வெறும் வறுப்பாக 1 ஸ்பூன் சோம்பு, சீரகம், மிளகுச் சேர்த்து வறுக்கவும்
- 4
பின் 1 ஸ்பூன் குண்டு மல்லி, 2 வத்தல் பின் ஒருக் கைப்பிடி அளவு கருவேப்லைச் சேர்த்து வதக்கவும்
- 5
வதக்கியதை சூடு ஆறவும் பொறபொறப்பாக அரைக்கவும்
- 6
பின் கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் சோம்பு நறுக்கிய பெரிய வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்
- 7
பின் 2 வத்தல், ஒருக்கைப்பிடி அளவு கருவேப்லை பின் உப்புச் சேர்த்து வதக்கவும்
- 8
பின் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும் பின் சிறிதாக நறுக்கிய 10 பல் சின்ன வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்
- 9
பின் 1 தக்காளியைச் சேர்த்து வதக்கியதும் அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள் 3 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்து வதக்கவும்
- 10
பின் மட்டன் வேக வைத்த தண்ணீருடன் மட்டனைச் சேர்த்து பின் வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்
- 11
நன்றாக வெந்ததும் எண்ணெய் பிரியும் போது இறக்கி பறிமாறவும் மட்டன் சுக்கா வருவல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes































கமெண்ட் (2)