ராகி மெதுவடை பர்கர் வித் வாழைக்காய் பார்பிக்யூ(ragi vada barbeque recipe in tamil)

ஆரோக்கியமான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை ட்ரை செய்து பார்க்கவும்.
மைதா பதிலாக ராகி மாவை வைத்து பர்கர் செய்துள்ளேன்.
லெட்யூஸ் க்கு பதிலாக மணத்தக்காளி இலை வைத்துள்ளேன்.
மயோனைஸ் தேங்காய் பாலில் இருந்து செய்துள்ளேன். அதேபோல் வெண்டைக்காய் விதை வைத்து பிரைஸ் மற்றும் வாழைக்காயை வைத்து பார்பிக்யூ. #made1
ராகி மெதுவடை பர்கர் வித் வாழைக்காய் பார்பிக்யூ(ragi vada barbeque recipe in tamil)
ஆரோக்கியமான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை ட்ரை செய்து பார்க்கவும்.
மைதா பதிலாக ராகி மாவை வைத்து பர்கர் செய்துள்ளேன்.
லெட்யூஸ் க்கு பதிலாக மணத்தக்காளி இலை வைத்துள்ளேன்.
மயோனைஸ் தேங்காய் பாலில் இருந்து செய்துள்ளேன். அதேபோல் வெண்டைக்காய் விதை வைத்து பிரைஸ் மற்றும் வாழைக்காயை வைத்து பார்பிக்யூ. #made1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் உளுந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் பின் அதை மிக்ஸியில் ஊறவைத்த உளுந்து, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
- 2
அரைத்த மாவில் அரை கப் ராகி மாவு, அரை டேபிள்ஸ்பூன் மிளகு,கால் டேபிள்ஸ்பூன் சீரகம், 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் மெது வடை போல் தட்டி அதை எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்
- 4
வெண்டைக்காய் 2 எடுத்துக் கொள்ளவும். அதை நீளவாக்கில் வெட்டி பின் உள்ளே இருக்கும் விதையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, 1/4 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 6
அதில் வெண்டைக்காயின் விதை மற்றும் தோலை கலந்து வைத்துள்ள மாவில் நன்றாக பிரட்டிக் கொள்ளவும். பின்னர் அதை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 7
ஒரு வாழைக்காயின் தோலை உரித்துக் கொண்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதைத் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.பின்னர் வெண்டைக்காய் பொரித்த அந்த மாவிலேயே வாழைக்காயையும் பிரட்டிக் எடுத்துக்கொள்ளவும்.
- 8
இப்பொழுது வாழைக்காயை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 9
இப்பொழுது ஒரு வாணலியில் அரை டேபிள்ஸ்பூன் வெண்ணெய், 2 சிறிதாக நறுக்கிய பூண்டு, 1/4 டீஸ்பூன் சோயா சாஸ், 1 டேபிள்ஸ்பூன் கெட்சப், 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் பொரித்த வாழைக்காயை சேர்த்து கலந்தால் வாழைக்காய் பார்பிகியூ ரெடி.
- 10
தேங்காய் பால் ஒரு கப்பை பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். பின்னர் அதில் சிறிதளவு உப்பு,1/4 எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். இப்பொழுது அதில் கொஞ்சம் கொஞ்சமாக அரை கப் ரீபைண்ட் ஆயில் சேர்த்து மயோனைஸ் போல் கெட்டியாகும் வரை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும் கொள்ளவும்.
- 11
இப்பொழுது ஒரு வாணலில் கால் டேபிள் ஸ்பூன் வெண்ணை, 2 வர மிளகாய், ஒரு வெங்காயம் ஒரு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு வாணலில் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் விழுது சேர்த்து இறக்கவும்.
- 12
இப்பொழுது பர்க்கர் செட் செய்ய, செய்து வைத்துள்ள கேழ்வரகு மெது வடையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாதியில் செய்த தேங்காய் மயோனைஸ் சேர்த்துக் கொள்ளவும்
- 13
இப்பொழுது அதில் செய்த வாழைக்காய் பார்பிக்யூ, தக்காளி, வெங்காயம் மற்றும் மணத்தக்காளி கீரை இலையை வைக்கவும்.
- 14
இரண்டாக வெட்டிய இன்னொரு பாதி மெதுவடை இல் கோக்கனட் மயோனைஸ் தடவி இதன் மேலே வைக்கவும்.
- 15
இதன் பக்கத்தில் வெண்டைக்காய் ஃப்ரை மற்றும் செய்த தக்காளி வெங்காயம் சார்ஜை வைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes






























கமெண்ட்