பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)

இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி.
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள உளுந்த பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதே ஆயிலில் சின்ன வெங்காயம் பூண்டு வரமிளகாய் புளி சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு எடுத்து வைத்துள்ள தக்காளியை வதக்கிக் கொள்ளவும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து இந்தக் கலவையை நன்றாக ஆறவிடவும். ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் இந்த கலவையை சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும். இப்பொழுது சுவையான பூண்டு தக்காளி சட்னி தயார். இதைத் தடுப்பதற்காக தாளிப்பு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு அரைத்து வைத்த சட்னியில் கலந்து கொள்ளவும்.
- 3
இட்லி தோசை சாதம் சப்பாத்தி போன்றவற்றிற்கு மிகவும் அருமையான சுவையான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி தயார். நன்றி ஹேமலதா கதிர்வேல்.
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட்