கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)

கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி சிறு தீயில் வைத்து பட்டையை போட்டு வறுக்க வேண்டும். கிராம்பு ஏலக்காய் என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்க வேண்டும்.
- 2
கடைசியாக பிரிஞ்சி இலை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். கருகக்கூடாது. கரிந்தால் சுவை நன்றாக இருக்காது. பின் ஆற வைக்க வேண்டும்.
- 3
நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்வோம். மிகவும் தூளாக வேண்டுமென்றால் நன்கு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்படியே பயன்படுத்தலாம்.
- 4
கறி சமைக்கும் போது இந்த தூளை சேர்த்து செய்தால் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டுப் பாருங்க. 😋
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட் (3)