பருப்பு உப்பட்டு (Dal uppattu recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

உப்பட்டு என்பதும் போளி என்பதும் ஒன்று தான். கடலைப் பருப்பு வைத்து செய்யும் இந்த உப்பட்டு அம்மாவின் ஸ்பெஷல்.
#Birthday1

பருப்பு உப்பட்டு (Dal uppattu recipe in tamil)

உப்பட்டு என்பதும் போளி என்பதும் ஒன்று தான். கடலைப் பருப்பு வைத்து செய்யும் இந்த உப்பட்டு அம்மாவின் ஸ்பெஷல்.
#Birthday1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
  1. 1 கப் கடலை பருப்பு
  2. 1&1/4 கப் பொடித்த வெல்லம்
  3. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  4. மேல் மாவு செய்ய:
  5. 1&1/2 கப் மைதா மாவு
  6. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  7. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  8. ஒரு சிட்டிகைஉப்பு
  9. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    கடலை பருப்பை நன்கு கழுவி குக்கரில் மூன்று விசில் விட்டு எடுக்கவும்.

  2. 2

    வெல்லத்தை பொடித்து ஒரு கடாயில் சேர்த்து ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  3. 3

    அத்துடன் கடலை பருப்பை மசித்து சேர்த்து, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டும். அதே சூட்டில் ஐந்து நிமிடங்கள் கலந்து விட்டு,கொஞ்சம் ஆற விடவும். இப்போது கெட்டியான பூரணம் கிடைக்கும். (உள் மாவு)

  4. 4

    பருப்பு பூரணத்தை லட்டு போல் உருண்டையாக உருட்டி தயாராக வைக்கவும்.

  5. 5

    ஒரு பௌலில் மைதா மாவு,உப்பு,எண்ணெய்,கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  6. 6

    பின்னர் எடுத்து இலேசாக தட்டி, நடுவில் உருட்டி வைத்துள்ள பூரண உருண்டையை வைத்து மூடி,பின்னர் விரல்களால் வட்ட வடிவில் தட்டி, தோசை தவாவில் போட்டு,மிதமான சூட்டில் வைத்து இருபுறமும் சுட்டு எடுக்கவும். சுடும் போது மேலே நெய் ஊற்றவும்.

  7. 7

    இப்போது மிகவும் சுவையான, மெது மெது பருப்பு உப்பட்டு சுவைக்கத்தயார்.

  8. 8

    இந்த பருப்பு உப்பட்டு ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட். அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes