ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)

ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .
ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ப்ரோக்கோலி போட்டு, இரண்டு நிமிடம் வைத்து, கழுவி எடுத்து, தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் போட்டு நீரில்லாமல் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பட்டை,கிராம்பு ஏலக்காய், முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
- 3
அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் பட்டர் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து,சிறு தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
- 4
இப்போது தண்ணீர் இல்லாமல் வதக்கி வைத்த ப்ரோக்கோலி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும் பிறகு 5 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- 5
ப்ரோக்கோலி வெந்து நன்கு கிரேவி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லி இலை தூவி பரிமாறலாம் சுவையான ப்ரோகோலி பட்டர் மசாலா தயார்.😋🤤
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்