வரகு மக்காச்சோள வடை(varagu makkasola vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வரகு அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனை இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
மக்காச்சோ நல்ல மணிகளை ஒருமுறை மட்டும் சுற்றி அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த வரகு அரிசி மாவுடன் திப்பி திப்பியாக அரைத்து மக்காச்சோளத்தை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சீரகம், பெருங்காயத்தூள், கொத்தமல்லி கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து இந்த மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி காய்ந்த எண்ணெயில் இருபுறமும் சிவக்க பொறித்து எடுத்தால் அருமையான சுவையான வரகு மக்காச்சோள வடை தயார் 😋😋😋
- 6
குறிப்பு
கரம் அதிகம் தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பப்பட்டவர்கள் கேரட் முட்டைக்கோஸ் முதலிய காய்கள் சேர்த்தும் செய்யலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (4)