வாழை பூ சின்ன வெங்காயம் வடை(valaipoo vadai recipe in tamil)

வாழை பூ சின்ன வெங்காயம் வடை(valaipoo vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பு கழுவி அதில் மிளகாய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். சின்ன வெங்காயம் முக்கால் டம்ளர் அளவிற்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பூ ஒன்றரை கப் அளவிற்கு ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.5 பல் பூண்டை நசுக்கி கொள்ளவும்.கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெருங்காயத்தூள் மற்றும் சோம்பு எடுத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.. இரண்டு மூன்று டேபிள் ஸ்பூன் ஊற வைத்த முழு பருப்பை தனியாக எடுத்துக் கொள்ளவும
- 2
மீதி பருப்பை பச்சை மிளகாய் வர மிளகாய் பெருங்காயத்தூள் சோம்பு சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஆய்ந்த வாழைப்பூவை அரை டம்ளர் மேல் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். அதை தண்ணீர் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். முழு பருப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டிய பூண்டு, வாழைப்பூ, தூள் உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி இவற்றை சேர்த்து அரைத்த வடை மாவில் நன்கு பிசைந்து கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு பக்கம் வானலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய வைக்கவும். அதற்குள் வடை மாவை தேவையான அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது உள்ளங்கையில் ஒரு உருண்டையை வைத்து மறு கையால் உள்ளங்கையில் அழுத்திவிட்டு காய்ந்த எண்ணெயில் போடவும். ஒருபுறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். மிதமான தீயில் இரண்டு புறமும் சிவக்க வைத்து எண்ணெய் முறைய அடங்கியவுடன் எடுக்கவும்.
- 4
சுவையான வாழைப்பூ சின்ன வெங்காய வடை தயார். மாலை நேரம் டீ காபியுடன் சாப்பிடலாம். அல்லது மதிய சாப்பாட்டிற்கு சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். புளி சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட் (4)