தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)

#JP - தை திருநாள்
தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்...
தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்
தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்...
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகள் அதாவது முருங்கைக்காய், அவரைகாய், கத்திரிக்காய், பரங்கிகாய், தக்காளி எல்லாவற்றையும் சிறு துண்டாக நறுக்கி வைத்துக்கவும், துவரம் பருப்பை குழைய வேக வைத்து எடுக்கவும், வறுக்க வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக்கவும்
- 2
ஸ்டவ்வில் வானலி வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மல்லி, கடலைபருப்பு, வெந்தயம், வத்தல், பெருங்காயம், தேங்காய் சேர்த்து கருகாமல் நன்கு வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து பொடித்த பிறகு
- 3
கொஞ்சம் தண்ணி விட்டு நன்கு விழுதாக அரைத்துக்கவும். ஸ்டவ்வில் பாத்திரம் வைத்து காய்,தேவையான புளி, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும்
- 4
காய் நன்றாக வெந்த பிறகு அரைத்த விழுது சேர்த்து கலந்து கொதிக்க விட்டு, கடைசியாக வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து தேவைக்கு எத்தவாறு உப்பு, ஒரு சின்ன துண்டு வெல்லம் சேர்த்து கொதித்ததும் கீழே இறக்கி விடவும்
- 5
ஸ்டவ்வில் கரண்டி வைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, பெரும்காய தூள், வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்துன் வறுத்து தாளிக்கவும்.. மிக ருசியான தேங்காய் வறுத்து அரைத்த பாலக்காட் ஸ்பெஷல் சாம்பார் தயார்.... சாதத்துடன் விட்டு சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்...
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்