ராஜமா உருண்டை குழம்பு

#PT - Rajma Gravy
அருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravy
அருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராஜமாவை 8-10 மணி நேரம் முழுகும் அளவு தண்ணீரில் ஊற விடவும்,
- 2
பிறகு தண்ணீர் வடிகட்டி ஒரு மிக்ஸியில் 10 வரமிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைது எடுத்து ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து பிசைந்துக்கவும்
- 3
நன்கு பிசைந்ததை சிறு சிறு உருண்டைசெய்துக்கவும். தேகாய் துருவலுடன் சோம்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தூக்கவும்
- 4
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், வத்தல் மிளகாய் சேர்த்து வறுபட்டதும்
- 5
ஒன்னிரண்டாக நசுக்கின பூண்டு சேர்த்து நன்கு வதக்கிய பிறகு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி புளி தண்ணி, மற்றும் ராஜமா வேக வைத்த தண்ணி, பெரும்காயம் சேர்த்து கொதிக்க விடடு
- 7
அத்துடன் வெல்லம், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதித்த பிறகு ஒவொரு உருண்டைக்காளா எடுத்து போட்டு வேக விடவும், நன்கு வெந்து உருண்டைகள் மேலே எழும்பி வரும் வரை காத்திருக்கவும்
- 8
இப்போது சுவையான ராஜமா உருண்டை குழம்பு தயார்... ரொம்ப டேஸ்டான குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்... செய்து பார்த்து ருசிக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட் (2)