பால் பவுடர் பர்ஃபி

Raihanathus Sahdhiyya @foodie_feeds
பால் பவுடர் பர்ஃபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கவும்
- 2
பிறகு அதில் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கலக்கவும்.
- 3
அந்த கலவையில் பொடித்த சர்க்கரை சேர்க்கவும். இப்பொழுது நீர் விடும்.. நன்றாக கிளறி விடவும்
- 4
கலவை திக்கான உடன் கை விடாமல் கிளற வேண்டும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்
- 5
கலவை ஒரு சேர திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்
- 6
ஒரு நெய் தடவிய தட்டில் அதை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் கொண்டு சமப்படுத்தி அதன் மீது நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவவும்
- 7
சுவையான சுலபமான பால் பவுடர் பர்ஃபி தயார்..குளிர்ந்த பின் துண்டுகளாக்கி பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8697078




கமெண்ட்