உருளைக்கிழங்கு மக்கானா கிரேவி (Urulaikilangu makkana Gravy Recipe in Tamil)

#ஆரோக்கியசமையல்
உருளைக்கிழங்கு மக்கானா கிரேவி (Urulaikilangu makkana Gravy Recipe in Tamil)
#ஆரோக்கியசமையல்
சமையல் குறிப்புகள்
- 1
மக்கானாவில் இரும்பு சத்தும் கார்போஹைட்ரேட்டும் அதிகமாக உள்ளது.
- 2
இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உணவுக்கட்டுப்பாடு இருப்பவர்களும் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 3
சர்க்கரை நோய் இருப்பவர் களும் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
- 4
இந்த மக்கானாவையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து ரெஸ்டாரன்ட் சுவையில் ஒரு கிரேவி செய்யலாம்
- 5
ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து மக்கானாவை மூன்று நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்
- 6
மக்கானாவை வறுத்து எடுத்த பிறகு அதே வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்
- 7
எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை சீரகம் சேர்த்து பொரிக்கவும்
- 8
அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 9
தக்காளியை அரைத்து அதில் சேர்த்து வதக்கவும்.
- 10
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 11
மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், உப்புத்தூள் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 12
வேக வைத்த இரண்டு உருளைக்கிழங்கை சேர்க்கவும்
- 13
வறுத்து வைத்த மக்கானாவை சேர்க்கவும்.
- 14
பத்து நிமிடங்கள் சிறிய தீயில் வைத்து மூடி வேக வைக்கவும்.
- 15
பிரியாணி மசாலா, கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்
- 16
இந்த கிரேவி பூரி சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இது ரெஸ்டாரன்ட் சுவையுடன் இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்