சிர்கேவாலா ஜிங்கா (sirkevala jinga recipe in Tamil)
# goldenapron2
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு ஐ தோல் சீவி விட்டு சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பனீரை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
- 3
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்
- 5
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 7
பின் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் உப்பு தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறவும்
- 8
இரண்டு நிமிடம் வரை வதங்கியதும் பனீரை சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 10
எல்லாம் சேர்ந்து கொதித்து திக்காக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 11
சுவையான மணமான சாதம் சப்பாத்தி நாண் புல்க்கா ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிட நல்ல சைட் டிஷ் ரெடி
Similar Recipes
More Recipes











கமெண்ட்