தக்காளி சேமியா கிச்சடி/tomoto

#lockdown2 #golden apron 3 #book
வீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா?

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேமியாவை ஒரு ஸ்பூன் நெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். மேற்கூறிய காய்கறிகளை படத்தில் காட்டியபடி பொடியாக அரிந்து கொள்ளவும்.
- 2
கடுகு,உளுத்தம்பருப்பு, கல்லப்பருப்பு, இஞ்சி,பச்சை மிளகாய், வர மிளகாய், வெங்காயம், தக்காளி,கருவேப்பிலை சேர்த்து எண்ணெயில் தாளித்துக் கொள்ளவும். பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வதங்கிய பின்பு 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும். மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்க்கவும்.
- 3
மூடி சேர்த்து ஐந்து நிமிடம் காய்கறிகளை வேகவிடவும். பிறகு சேமியாவை அதில் சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் ரவை சேர்க்கவும். ஒரு முறை நன்கு கிளறி விட்டு அடுப்பை நிறுத்திவிட்டு இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.
- 4
2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து சேமியாவை ஒரு முறை நன்கு கிளறவும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் மூடி போட்டு ஐந்து நிமிடம் மீண்டும் வேகவிடவும். 5 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை கிளறிவிடவும் அலங்கரிக்க கொத்தமல்லி தழையை தூவி விடவும்..சுவையான சூடான தக்காளி சேமியா ரெடி தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி மற்றும் தயிர் நன்றாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்