தக்காளி சேமியா கிச்சடி/tomoto

#lockdown2 #golden apron 3 #book
வீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா?
தக்காளி சேமியா கிச்சடி/tomoto
#lockdown2 #golden apron 3 #book
வீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா?
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேமியாவை ஒரு ஸ்பூன் நெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். மேற்கூறிய காய்கறிகளை படத்தில் காட்டியபடி பொடியாக அரிந்து கொள்ளவும்.
- 2
கடுகு,உளுத்தம்பருப்பு, கல்லப்பருப்பு, இஞ்சி,பச்சை மிளகாய், வர மிளகாய், வெங்காயம், தக்காளி,கருவேப்பிலை சேர்த்து எண்ணெயில் தாளித்துக் கொள்ளவும். பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வதங்கிய பின்பு 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும். மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்க்கவும்.
- 3
மூடி சேர்த்து ஐந்து நிமிடம் காய்கறிகளை வேகவிடவும். பிறகு சேமியாவை அதில் சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் ரவை சேர்க்கவும். ஒரு முறை நன்கு கிளறி விட்டு அடுப்பை நிறுத்திவிட்டு இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.
- 4
2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து சேமியாவை ஒரு முறை நன்கு கிளறவும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் மூடி போட்டு ஐந்து நிமிடம் மீண்டும் வேகவிடவும். 5 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை கிளறிவிடவும் அலங்கரிக்க கொத்தமல்லி தழையை தூவி விடவும்..சுவையான சூடான தக்காளி சேமியா ரெடி தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி மற்றும் தயிர் நன்றாக இருக்கும்.
Similar Recipes
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
நாட்டு காய்கறி புளிக் குழம்பு
#bookஇந்த புளிக்குழம்பு எங்கள் பக்கம் விரத சமையல் அன்று செய்யப்படுவதாகும் .மேலும் இதில் நாட்டுக் காய்கறிகள் எதை வேண்டுமானாலும் கலந்து செய்யலாம். வெண்டைக்காய் முக்கியமாக சேர்க்க வேண்டும். இந்த குழம்பிற்கு வெங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. வெறும் காய்கறிகளை மட்டும் கலந்து செய்யலாம். Meena Ramesh -
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன். Meena Ramesh -
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)
#golden apron3 #lockdown 2 #bookவீட்டில் தக்காளி மற்றும் தயிர் இருந்தது.ஒரு மாறுதலுககாக இதை செய்யவில்லை. முருங்கைக்காய் ஒன்றும், இரண்டு கத்தரிக்காய் மட்டுமே இருந்தது. பொரியல் செய்ய வேறு காய்கறிகள் இல்லை. லாக் டவுன் நேரத்தில் வெளியே செல்ல விரும்பவில்லை. அதனால் தொட்டு கொள்ள இதை செய்தேன்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.(tomoto,curd,and raitha/golden apron 3) Meena Ramesh -
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
-
சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்.. Nalini Shankar -
கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும் Drizzling Kavya -
-
-
-
-
-
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன். Meena Ramesh -
-
கொழுக்கட்டை உப்புமா
#book#கோல்டன் ஆப்ரான் 3என் அம்மா வீட்டு பலகாரம். எனக்கு மிகவும் பிடித்த உணவு. என் கணவர் வீட்டிலும் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். ஆவியில் வேக வைத்து பின் உப்புமாவாக தாளிக்க வேண்டும். அந்த கால ஆரோக்கிய உணவு. சுவையானதும் கூட. Meena Ramesh -
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
குடமிளகாய் சாதம்😋
#immunity #bookகுடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️ Meena Ramesh -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali
More Recipes
கமெண்ட்