மிளகாய் புளி கூட்டு (Milakaai pulikootu recipe in tamil)

மிளகாய் புளி கூட்டு (Milakaai pulikootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைமிளகாயை கழுவி இரண்டாக கீறி உள்பக்கம் இருக்கும் விதைகளை நீக்கவும்,அதிக காரம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் விதைகளை நீக்க தேவை இல்லை.
- 2
கீறிய மிளகாய்களை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.அல்லது மிக்சி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்துகொள்ளவும்.
- 3
வெங்காயத்தை மிக மிக சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் அதில் கடுகு உளுந்து சேர்க்கவும்.
- 5
கடுகு வெடித்ததும் அதில் வெந்தயம் சேர்க்கவும்.
- 6
பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
- 7
அதனுடன் பெருங்காயத்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்
- 8
அனைத்தும் வதங்கியதும் கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து கிளறவும்
- 9
எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வெல்லம் சேர்த்து கலக்கவும்
- 10
மிளகாய் புளிக்கூட்டில் எண்ணெய் முழுவதுமாக பிரிந்து வந்ததும் எடுத்து பரிமாறவும்.
- 11
சாம்பார் சாதம்,பருப்பு சாதம்,தயிர் சாதத்தோடு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- கார கத்திரிக்காய் குழம்பு (Kaara kathirikkaai kulambu recipe in tamil)
- சிக்கன் சுக்கா (Chicken chukka recipe in tamil)
- 🧄🌶️பூண்டு மிளகாய் பொடி🧄🌶️ (Poondu milakaai podi recipe in tamil)
- ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
- பீர்க்கங்காய் காரக்கறி (Peerkankaai kaara kari recipe in tamil)



கமெண்ட்