மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)

#arusuvai 1
மைசூர் பாகு எனது 100ஆவது ரெசிபி. இதை இங்கு பதிவிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாவில் வைத்தவுடன் கரையும் இந்த மைசூர் பாகை அனைவரும் சுவைக்கவும்.
மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
#arusuvai 1
மைசூர் பாகு எனது 100ஆவது ரெசிபி. இதை இங்கு பதிவிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாவில் வைத்தவுடன் கரையும் இந்த மைசூர் பாகை அனைவரும் சுவைக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவை நன்கு சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
தட்டு ஒன்றில் நெய் தடவி தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 3
கடலை மாவில் 100மி.லி நெய் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து தயாராக வைக்கவும்.
- 4
ஸ்டவ்வில் அடிகனமான நான்ஸ்டிக் பாத்திரத்தை வைத்து, சர்க்கரை மற்றும் 100மி.லி தண்ணீர் சேர்த்து சூடு செய்யவும். சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
- 5
சர்க்கரை முழுவதும் கரைந்ததும், நெய் கலந்து தயாராக வைத்துள்ள கடலை மாவுக்கலவையை சேர்த்து, கை விடாமல் கலந்துகொண்டே இருக்கவும்.
- 6
இந்தக் கலவை கொதித்து, குமிழ் குமிழாக வரும்போது, மீதமுள்ள 100மி.லி நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொண்டே இருக்கவும். ***அடிபிடிக்க விடக்கூடாது.
- 7
கை விடாமல் கலந்துகொண்டே இருக்கும் பட்சத்தில் ஓரம் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கவும்.
- 8
இறக்கி வைத்ததும் மீதமுள்ள 100மி.லி நெய் சேர்த்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.
- 9
இந்தக் கலவை ஊற்றிய நெய் முழுவதையும் உறிஞ்சிவிடும்.
- 10
உடனே கலவையை நெய் தடவி தயாராக வைத்துள்ள தட்டில் கொட்டி, ஒரு சமமாக சின்ன கப்பைக் கொண்டு சமமாக தேய்த்துவிடவும்.
- 11
சூடாறியவுடன் துண்டுகள் போடவும்.
- 12
இப்போது சுவையான, மிருதுவான, நாவில் வைத்தவுடன் கரையக்கூடிய மைசூர் பாகு சுவைக்கத்தயார்.
- 13
அனைவரும் செய்து சுவைத்து, மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
- வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
- நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
- எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
- மெட்ராஸ் புளி குழம்பு (Medras pulikulambu recipe in tamil)








கமெண்ட் (6)