பன்னீர் மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தட்டில் பன்னீர், மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து பிரட்டவும். வானலியில் நெய் சூடேரியதும் பிரட்டி வைத்த பன்னீரை பொறித்து தனியாக எடுத்து கொள்ளவும்.
- 2
அதே வானலியில் நெய் விட்டு சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி அத்துடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அத்துடன் அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின் அத்துடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கஷ்மீரி மிளகாய்தூள், மல்லிதூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதங்கிய பின் தயிர், உப்பு சேர்த்து கிளறி அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
பிறகு அத்துடன் ரோஸ்ட் செய்த பன்னீரை சேர்த்து மசாலா உடன் பிரட்டவும். கொஞ்சமாக கரம்மசாலா சேர்த்து 5நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான பன்னீர் மசாலா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13288999










கமெண்ட்