மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)

#mom கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், பூண்டு மிகவும் நல்லது, இதனை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை அறிந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, வெந்தயம், சோம்பு போட்டு தாளித்து கொள்ளவும்.
- 3
பின் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். இதனுடன் பூண்டு பல்லையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
நன்றாக வதக்கிய பின் ஒரு எலுமிச்சை அளவு புளி கரைசலை சேர்த்து கொள்ளவும்.
- 5
அதனுடன் மல்லித்தூள் மிளகாய் தூள் இவற்றை சேர்த்துக் கொதிக்கவிடவும். பின் மீன் துண்டுகளை அதனுடன் சேர்த்து கொதிக்க.
- 6
நன்கு கொதித்தவுடன் 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். மிகவும் சுவையான மீன் புளி குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்